அ - வரிசை 193 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவியோகம் | கூட்டம். |
அவிரேசனம் | மலவரட்சி. |
அவிர்ப்பாகம் | அவிப்பாகம். |
அவிர்ப்புக்கு | அக்கினி, சத்திரியபிதிர். |
அவிலம்பிதம் | விரைவு. |
அவில் | அவற்றுள். |
அவிவு | அழிவு. |
அவுசனம் | அவுசநசம். |
அவுசுக்காரன் | உடுப்பிலதிக ஆசையுள்ளவன். |
அவுசுப்பம் | தொடரி. |
அவுசுமாபகவாதரோகம் | ஒருவகை வாதரோகம். |
அவுணர் | அசுரர். |
அவுண் | அவுணர். |
அவுதசியம் | பசுவின்பால். |
அவத்துவாசனம் | ஔத்துவாசனம். |
அவேதம் | மறதி. |
அவைகரணம் | தோண்டல், மூடல். |
அவையவம் | அவயவம். |
அவையாவரிசி | கொழியலரிசி. |
அவயிற்றுக்குள் | அவற்றுள். |