அ - வரிசை 191 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவாவறுத்தல் | ஆசைநீக்கல். |
அவாவாமை | ஆசைப்படாமை. |
அவாவின்மை | வெறுப்பு. |
அவிகசிதம் | மலராதது. |
அவிகடம் | ஆட்டுமந்தை. |
அவிகாயம் | எரிச்சல், ஒருகாசம் வேகம். |
அவிகாரன் | ஆட்டுக்காரன், கடவுள். |
அவிகாரி | கடவுள், மாறாதவன். |
அவிக்கிரமம் | பராக்கிரமின்மை. |
அவிக்கை | அவித்தல். |
அவிசுப்பம் | தொடரி. |
அவிச்சி | அபேட்சை. |
அவிஞை | அஞ்ஞானம். |
அவிஞ்சதை | அறியாமை. |
அவிஞ்சாதம் | அறியப்படாதது. |
அவிஞ்ஞதை | அறியாமை. |
அவிஞ்ஞாதம் | அறியப்படாதது. |
அவிததம் | மெய்மை. |
அவிதானம் | ஒழுங்கின்மை. |
அவிதூசம் | ஆட்டுப்பால். |