அ - வரிசை 19 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடுக்களை | சமையல் அறை |
அடுக்கு | ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல் |
அடுக்குத்தொடர் | ஒருவர் தன் உயர்வுக்குக் காரணமாக இருப்பதன் பெயரை அல்லது உணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய பொருளுள்ள சொல்லை அடுக்கிக் கூறும் முறை( எ.கா. பாம்பு பாம்பு, மாடு மாடு) |
அடுக்குப்பண்ணு | ஏற்பாடு செய்தல்,ஆயத்தம் செய்தல் |
அடுக்குப்பாணை | ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு |
அடுக்குமல்லி | இரண்டு வரிசை இதழ்களைக் கொண்ட ஒரு வகை மல்லிகைப் பூ |
அடுக்குமாடி | ஒண்றன்மேல் ஒன்றாகப் பல தளங்களைக் கொண்ட அமைப்பு |
அடுக்குமொழி | எதுகை மோனை நிறைந்த சொல் அலங்காரம் ( எ.கா.. பெண்ணே என் கண்ணே) |
அடுகிடைபடுகிடையாக கிட | எந்நேரமும் ஓர் இடத்தில் இருத்தல் |
அடுத்த | (காலம்)ஒன்றுக்குப் பின் ஒன்று தொடர்ந்து வருகிற, (இடம்)தொடர்ந்தாற்போல் இருக்கிற |
அடுத்தபடியாக | 1. (ஒன்றை)அடுத்து 2. குறிப்பிடுவதற்கு மேலும் |
அடுத்தவர் | தன்னைச் சார்ந்தவர் அல்லாத மூன்றாவது நபர் |
அடுத்தவன் | தன்னைச் சார்ந்தவர் அல்லாத மூன்றாவது ஆள் |
அடுத்தாற்போல் | அடுத்து,தொடர்ந்து |
அடுத்து | ஒன்று முடிந்து அதன் தொடர்ச்சியாக என்ற பொருளில் வரும் ஒரு இடைச் சொல் |
அடுத்துக்கெடு | கெடுதல் செய்தல்,நம்பிக்கைத்துரோகம் செய்தல் |
அடுப்பங்கரை | சமையல் அறை |
அடுப்பு | நெருப்பு அல்லது மின்சாரம் போன்றவற்றால் சூடு உண்டாக்கிச் சமையல் செய்யப் பயன்படுத்தப்படும் சாதனம் அல்லது அமைப்பு |
அடுப்புக்கட்டி | பொங்கலிடுவதற்கான அடுப்பாகப் பயன்படும் களிமண்ணாலுருட்டப்பட்ட கட்டி |
அடுப்புக்கரி | 1.அடுப்பில் விறகு எரிந்த பின் எஞ்சியுள்ள கரி 2.அடுப்பு எரிக்கப் பயன்படும் கரி |