அ - வரிசை 189 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவப்பொழுது

வீண்பொழுது.

அவமதாங்குசம்

மதயானை.

அவமதிச்சிரிப்பு

நிந்தனைச்சிரிப்பு.

அவமழை

அகாலமழை.

அவமோசனம்

இட்டமாக்கல், கக்குதல்.

அவயக்கோழி

அடைக்கோழி.

அவயங்காத்தல்

அடைகாத்தல்.

அவயமிடல்

அபயமிடல்.

அவயவியுருவகம்

முரலளிக்குந் தெரிவைவத நாம்புயத்தாற்களிக்குந்தவமுடையோன் கண்";
அவயவியை யுருவகஞ்செய்து அவயவத்தைவாளாவுரைப்பது (உ-ம்) "வார்புருவங் கூத்தாடவாய்மழலை சேர்ந்தசைய - வேர்வரும்பச் சேந்துவிழிமதர்ப்ப

அவரசை

தங்கை.

அவரசைலம்

அஸ்தமயமலை.

அவரம்

அபரம்.

அவராகம்

இச்சையின்மை.

அவருணியம்

அவர்ணியம்.

அவரோகி

ஆல்.

அவலக்கணம்

அவலட்சணம்.

அவலட்சணன்

இலட்சண மில்லாதவன்.

அவலத்தருக்கம்

குதர்க்கம்.

அவலரக்கு

அரக்கிலொருவகை.

அவலுண்டனம்

உருளல், திருடல்.