அ - வரிசை 187 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவக்கொடை

வீண்கொடை.

அவசகுனம்

துர்ச்சகுனம்.

அவசனம்

அமைதி.

அவசாரி

வேசி.

அவசிட்டம்

மிச்சமானது.

அவசீனம்

தேள்.

அவசூலம்

சாமரை.

அவச்சூலம்

சாமரம்.

அவஞானம்

அவமானம்.

அவஞ்யாலங்காரம்

இகழ்ச்சியணி.

அவட்சயம்

அழிவு, நட்டம்.

அவட்சேபணம்

விழுதல்.

அவண

அவ்விடத்தன.

அவதந்திரம்

சதியோசனை, மடிப்பு.

அவதந்திரி

சதியோசனைக்காரன்.

அவதாரணஞானம்

நிண்ணயம்.

அவதாரமெடுத்தல்

பிறத்தல்.

அவதிப்படல்

கஷ்டப்படல்.

அவதிப்படல்

அவசரம்

அவதீரணம்

அவசங்கை.