அ - வரிசை 186 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அல்லோர் | அல்லாதார். |
அவகணிதம் | அவமானம். |
அவகண்டம் | முகப்பரு. |
அவகத்தம் | புறங்கை. |
அவகர்த்தம் | குழி. |
அவகாசதன | ஒதுக்கிடங்கொடுப்பவன். |
அவகாசப்பிரதம் | இடங்கொடுப்பது. |
அவகாரன் | கள்ளன். |
அவகாலம் | கெடுகாலம். |
அவகிரந்தனம் | சத்தமிட்டழுதல். |
அவகிருத்தியும் | அமங்கலகாரியம், துர்ச்செய்கை. |
அவகீனம் | தேள். |
அவகேடு | மிகுகேடு. |
அவக்கியாதம் | அவமானம். |
அவக்கியாதை | அவமானம். |
அவக்கிரகணம் | அவசங்கை, தடை. |
அவக்கிரந்தனம் | உரத்தழுதல். |
அவக்கிராகம் | சபிப்பு. |
அவக்கிரியை | அசட்டை. |
அவக்குணம் | அவகுணம். |