அ - வரிசை 185 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அலௌகிகப்பிரத்தியக்கம் | இலௌகிகப் பிரத்தியட்சமல்லாதது. |
அல்கலும் | நாடோறும். |
அல்கி | தங்கி. |
அல்குகழி | உப்பங்கழி, சிற்றாறு. |
அல்நார் | கல்நார், கன்னார். |
அல்பொருள் | அவர்ணியம். |
அல்லகம் | கோவணம். |
அல்லகாத்திரி | தணிகைமலை. |
அல்லவர் | பிறர். |
அல்லற்படல் | துன்பப்படல். |
அல்லாக்கால் | அல்லாவிடத்து. |
அல்லாதது | ஆகாதது, ஒழிந்தது. |
அல்லாது | அல்லாமல். |
அல்லாந்து | மகிழ்ந்து. |
அல்லாமை | கெட்டகுணம். |
அல்லார் | அல்லாதார். |
அல்லிப்பிஞ்சு | விழாதபிஞ்சு. |
அல்லிமூலகம் | அல்லிக்கிழங்கு. |
அல்லியை | கலப்பைக்கூட்டம். |
அல்லுழி | அல்லாவிடத்து. |