அ - வரிசை 184 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அலாரம் | கதவு. |
அலால் | அல்லால். |
அலானம் | கலப்பை. |
அலிஞ்சரம் | மட்சாடி. |
அலிமுகப்பாண்டுரோகம் | ஒருவகைப்பாண்டுரோகம். |
அலியன் | கடுக்காய். |
அலியெழுத்து | ஆய்த எழுத்து. |
அலுக்கொலு | குலைவு. |
அலுத்தசத்தி | பேரருளுடைமை. |
அலைகுதல் | அலைதல். |
அலைக்கழிவு | உலைவு. |
அலைக்கும் | வருத்தும். |
அலைசுதல் | அலைசல், சோம்பல். |
அலைதரல் | அலயச்செய்தல். |
அலைதாடி | களகம்பளம். |
அலைத்தரல் | அலைதல். |
அலைநீர் | கடல். |
அலைவாய்க்கரை | கடற்கரை. |
அலோகனம் | அதரிசனம். |
அலௌகிகசன்னிகருடம் | அலௌகீகமல்லாத சம்பந்தம். |