அ - வரிசை 183 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அலப்பியம் | அடையக்கூடாதது. |
அலமரும் | அசையும். |
அலமுகவிரும்பி | கலப்பையின்கொழு. |
அலம்புரிதல் | மிகச்செய்தல். |
அலராள் | இலக்குமி. |
அலரியோன் | சூரியன். |
அலரோன் | பிரமன். |
அலர்கதிர்ஞாயிறு | விரிகிரணச் சூரியன். |
அலர்த்தி | அலர்ச்சி. |
அலர்ந்தகாதல் | அதிக அன்பு. |
அலர்ந்திடுதல் | மலர்தல். |
அலர்மகள் | இலக்குமி, சரச்சுவதி. |
அலலியம் | கலப்பை. |
அலவுறல் | அலம்வருதல். |
அலவுற்று | அலம்வந்து. |
அலவைப்பெண்டிர் | வியபிசாரப் பெண்கள். |
அலறுதல் | அலறல். |
அலாதார் | ஒழிந்தபிறர். |
அலாபதம் | இலாமிச்சு. |
அலாபுகம் | சுரைக்காய். |