அ - வரிசை 182 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அலகைக்கொடியாள்

காளியம்மை.

அலகைமுலையுண்டோன்

கண்ணன்.

அலகைமுலையோடாவியருந்தினோன்

கிருட்டினன்.

அலக்கணம்

அதிட்டவீனன், இலக்ககணவீனம்.

அலக்கைச்சுரம்

கீழ்க்காய்நெல்லி.

அலங்கடை

அல்லாதவிடத்து. ரழவலங்கடையே (தொல்.எழுத்.30).

அலங்கரிப்பு

சிங்காரிப்பு.

அலங்கலம்

அசைதல்.

அலங்காரத்திருவிழா

விசேடத் திருவிழா.

அலங்காரபஞ்சகம்

ஒரு பிரபந்தம்.

அலங்காரப்படுத்துதல்

சிங்காரித்தல்.

அலங்காரப்பிரியன்

விஷ்ணு.

அலங்காரித்தல்

அலங்கரித்தல்.

அலங்கியம்

கடத்தற்கரியது.

அலசகம்

உதரவாயு, சோம்பு.

அலசத்துவம்

சோம்பு.

அலட்டுச்சன்னி

பிதற்றுச்சன்னி.

அலத்துவம்

மிக்கதன்மை.

அலந்தோர்

இடுக்கட்பட்டோர்.

அலப்படை கொண்டோன்

பலராமன்.