அ - வரிசை 181 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அர்த்தசாலம் | பொருட்கூட்டம். |
அர்த்தநாரீசுரன் | பாதியுடம்பு பெண்ணாக இருக்குஞ் சிவன். |
அர்த்தபிருட்டகம் | அங்கக்கிரியை பதினாறிலொன்று. |
அர்த்தப்பிரதீதி | அர்த்தமறிதல். |
அர்த்தமண்டபம் | கருப்பக் கிரகமண்டபம். |
அர்த்தவுதயம் | அர்த்ததோதயம். |
அர்த்தாங்கம் | அர்த்தாங்கவாதரோகம். |
அர்த்தாங்கவாதம் | பாரிசவாதம். |
அர்த்தாங்கீகாரம் | ஒரு பகுதியை அங்கீகரித்தல். |
அர்த்தாட்சி | பக்கப்பார்வை. |
அர்த்தாதுரம் | பணவாசை. |
அர்த்திதவாதம் | ஒருவகைரோகம். |
அர்ப்பகன் | பாலகன். |
அர்ப்பீடம் | அரப்பாயம். |
அலகிரி | அலகரி. |
அலகின்மாறு | விளக்குமாறு. |
அலகுசோலி | அறுகு. |
அலகுநிலை | பாக்குச்சுநிலை. |
அலகுபருப்பு | ஒருபட்டாணி. |
அலகுபூட்டல் - தவசில் வாயை மூடுதல்அலகுபோடல் | நாக்கைத் துளைத்துச்செய்யுமோர் தவம். |