அ - வரிசை 180 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அரைப்புக்கட்டி | இரும்பைப் பிண்ணாக்கு. |
அரைப்பூட்டு | இடைக்கட்டு இடுப்பின்பொருத்து. |
அரையலன் | சோம்பன். |
அரைவாசி | பாதி. |
அரைவெறி | சிறிதுவெறி. |
அரோசிப்பு | அருவருப்பு. |
அர்கதமுனி | அருகன். |
அர்க்கத்து | தடங்கல். |
அர்க்கலம் | கதவடைக்குந்தாழ். |
அர்ச்சகன் | அருச்சகன். |
அர்ச்சனாதிகாரம் | பூசனை செய்தற்குயோக்கியம். |
அர்ச்சனியம் | அருச்சியம். |
அருச்சனீயம் | மதிக்கத்தக்கது. |
அர்ச்சித்தல் | அருச்சித்தல். |
அர்ச்சுனம் | அருச்சுனம். |
அர்ச்சுனன் | அருச்சுனன். |
அர்த்தசஞ்சயக்கிருது | ஒருவகை யதிகாரி. |
அர்த்தசந்திரபாணம் | பிரைமுகங் கொண்டபாணம். |
அர்த்தசா | பிறைவடிவு. |
அர்த்தசாமம் | இரவில் நடுச்சாமம். |