அ - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அடிமைத்தனம்

(பிற நாடு,இனம் போன்றவற்றிடம்) அடிமைப்பட்டிருக்கும் நிலை

அடியடியாக

தலைமுறை தலைமுறையாக

அடியவர்

இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்

அடியாக

மூலமாக என்ற பொருள் தரும் இடைச் சொல்

அடியார்

அடியவர்

அடியாள்

அடித்து மிரட்டுதல்,கொலை செய்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அமர்த்தப்படும் நபர்

அடியாள்

அரசியல் தலைவர் முதலியோரின் தனிப்பட்ட மெய்ப் பாதுகாவலர் போல் இருந்து அவர் சொல்லும் காரியங்களை அவை சரியா பிழையா என்று சீர்தூக்கிப் பாக்காமல் செய்யும் நபர்

அடியுரம்

விதைப்பதற்கு அல்லது நடுவதற்கு முன் இடப்படும் உரம்

அடியெடுத்து வை

நடக்க ஆரம்பித்தல்,நுழைதல்,புகுதல்,புதிய நிலைக்குச் செல்லுதல்

அடியேன்

தன்னைத் தாழ்த்திப் பணிவாகக் குறிப்பிட்டுக்கொள்ளும்போது பயன்படுத்தும் சொல்

அடியொற்றி

முன்மாதிரியாகக் கொண்டு

அடியோட்டம்

(கடல்,ஆறு போன்றவற்றில்) அடியில் அல்லது ஆழமான பகுதியில் செல்லும் நீரோட்டம்

அடியோடு

முற்றிலும்
அறவே

அடிவயிறு

வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி

அடிவருடி

வசதியிலோ அதிகாரத்திலோ உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் சுயமரியாதையை இழந்து அண்டிப் பிழைக்கும் நபர்

அடிவருடு

(சுயநலத்திற்காக ஒருவரை)மகிழ்விக்க வேண்டிச் சுயமரியாதையை இழக்கும் வகையிலான செயல்கள் செய்தல்

அடிவாங்கு

(வாழ்க்கையில் அடிபடுதல்,(நீண்ட பயன்பாட்டினால் இயந்திரம் போன்றவை) தேய்ந்து போதல்

அடிவாரம்

மலையின் கீழ்ப்பகுதி

அடிவானம்

தொலைவிலிருந்து பார்க்கும்போது நிலத்தை வானம் தொடுவது போல் நீண்ட கோடாகத் தெரியும் இடம்,தொடு வானம்

அடு

பொருத்தமாக இருத்தல்,ஏற்றதாதல்