அ - வரிசை 179 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அருளாழிவேந்தன் | அருகன், கடவுள். |
அருளுதல் | அருளல். |
அருளுவம் | அருளவம். |
அருள்விருட்சம் | பஞ்சதாரு. |
அரூபகம் | உருவமின்மை. |
அரூபதை | அவலட்சணம். |
அரேணுகை | காட்டுமிளகு. |
அரைகல் | அம்மி. |
அரைக்குளகம் | ஒறுபடி, அரைமாக்கல். |
அரைங்கரம் | நானாழி. |
அரைசபாரம் | அரசு நடத்துங்கடமை. |
அரைசர் | அரசுசெய்வோர். |
அரைசன் | அரசன். |
அரைசிலை | அம்மி. |
அரைசு | அரசு. |
அரைச்சதங்கை | ஓரிடையணி. |
அரைச்சல்லடம் | அரைச்சட்டி. |
அரைஞாண்மணி | அரையிற்கட்டுஞ்சதங்கை, கிங்கிணி. |
அரைத்தொடர் | அரையிற்கட்டுஞ் சங்கிலி. |
அரைநரண் | இடுப்பில் கட்டுங்்கயறு. |