அ - வரிசை 178 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அருத்திரம்

மரமஞ்சள்.

அருத்தேந்து

அர்த்தசந்திரன்.

அருத்தோபார்ச்சனம்

பொருளீட்டல்.

அருந்ததிபதி

வசிஷ்டமுனிவன்.

அருந்தவர்

முனிவர்.

அருந்திடில்

உண்ணுதல்.

அருந்துதி

அருந்ததி.

அருந்துவோன்

உண்போன்.

அருப்புத்துருப்பு

அருந்தேட்டம், அருமை.

அருமறைக்கொடியோன்

துரோணாசாரி.

அரும்பர்

அரும்பு.

அரும்பி

குங்குமபாஷாணம்.

அரும்பொருவினை

எண்வகைமணத்துளொன்று.

அருவன்

உருலிலி.

அருவினை

விசேஷபாவம்.

அருளரிசி

குடசப்பாலை, வெட்பாலை.

அருளறம்பூண்டோன்

புத்தன்.

அருளாதி

குடசப்பாலை.

அருளாபு

சாரணைப்பூண்டு.

அருளாமை

அருள் செய்யாமை.