அ - வரிசை 177 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அருணோபலம்

பதுமராகம்.

அருத்தகங்கை

காவிரியாறு.

அருத்தகாமம்

பொருளாசை.

அருத்தசந்திரபாணம்

பிறை முகாத்திறம்.

அருத்தசந்திரன்

மயிறறோகைக் கண்.

அருத்தசானவி

காவேரிநதி.

அருத்தநாள்

பாதிநாள்.

அருத்தநிசா

அர்த்தசாமம்.

அருத்தபதி

அரசன், குபேரன்.

அருத்தபாகம்

பாதிப்பங்கு.

அருத்தப்பிராத்தி

சம்பத்தடைதல்.

அருத்தராத்திரம்

நடுராத்திரி.

அருத்தவத்து

அருத்தமுடையது.

அருத்தனம்

நிந்தை.

அருத்தனை

பிச்சைகேட்டல்.

அருத்தன்

கடவுள்.

அருத்தாங்கீகாரம்

அரைமனம்.

அருத்தாந்தரம்

கருத்துப்பிரிவு.

அருத்தாந்தரன்னியாசம்

அருத்தாந்தரநியாசம்.

அருத்தாபத்திப் பிரமாணம்

அருத்தாபத்தி.