அ - வரிசை 175 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அருக்களிப்பு | அருவருப்பு, பயம். |
அருககேந்துசங்கமம் | அமாவாசியை. |
அருக்கை | தமக்கை. |
அருங்கலச்செவ்விதழ் | பொற்றாமரை. |
அருங்கலம் | அரசர்குரிய பொருள். |
அருங்கலை நாயகன் | புத்தன். |
அருங்கிடை | பட்டினி. |
அருங்கேடு | கேடில்லாமை. |
அருங்கொடைத்தானம் | உத்தமதானம். |
அருச்சயோகம் | பூசை. |
அருச்சிகன் | கோவிற்பட்டன். |
அருச்சிக்கை | அருச்சித்தல். |
அருச்சிப்பு | அருச்சனை. |
அருச்சுநி | பசு. |
அருஞ்சிறை | கடுஞ்சிறை, நரகம். |
அருட்கண் | கிருபைநோக்கு. |
அருட்குடையோன் | அருகன், கடவுள். |
அருட்குறி | சிவலிங்கம். |
அருட்சத்தி | இரசம், பராசக்தி. |
அருட்சி | அருளுதல். |