அ - வரிசை 174 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அறிவாள்

கூனவாள்.

அரிவிகொய்தல்

அறுத்தல்.

அறிவைபங்காளன்

சிவன்.

அரிள்

பயம்.

அருக

நெருக்கமாக.

அருகஞ்சி

சீந்திற்கொடி.

அருகணைத்தல்

தழுவல்.

அருகந்தர்

அருகசமயத்தோர்.

அருகனைமுடிதரித்தாள்

தர்மதேவதை.

அருகா

கெடாத.

அருகியன்மருதம்

குரல்குரலாய செம்பாலை.

அருகுதல்

அருகல்.

அருகுறல்

கிட்டல்.

அருகே

கிட்ட
பக்கத்தில்

அருக்கதானம்

பொற்கானிக்கை.

அருக்கபாதவம்

நிம்பம்.

அருக்கபுத்தி

சூரியகதி.

அருக்கமண்டலம்

சூரியமண்டலம்.

அருக்கர்

சூரியர்.

அருக்கலம்

அலை, தடை.