அ - வரிசை 172 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரிட்டன்

ஓர் அசுரன்.

அரிட்டானகம்

அபசயம், பயங்கரம்.

அரிட்டித்தல்

கொல்லல்.

அரிணவம்

கடல்.

அரிணாங்கன்

சந்திரன்.

அரிதகிக்காய்

பச்சைக்கடுக்காய்.

அரிதாள்

ஒட்டு, கதிரறுத்தாள்.

அரிதினம்

ஏகாதசி.

அரித்தவிசு

சிங்காசநம்.

அரித்திரான்னம்

மஞ்சட்சாதம்.

அரித்துவசம்

சிங்கக்கொடி.

அரித்துவம்

பகைமை.

அரிநெல்லி

ஒருமரம்.

அரிநெல்லி

அரநெல்லி

அரிபிராணன்

சிவன்.

அரிபிளவை

ஒரு சிலந்தி.

அரிபுதை

இரவு.

அரிபுழு

அரிக்கும்புழு.

அரிப்பதாகன்

வீமன்.

அரிப்பிணா

பெண்சிங்கம்.