அ - வரிசை 170 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரவணைச்செல்வன்

விட்டுணு.

அரவணையான்

விட்டுணு.

அரவதுவசன்

துரியோதனன்.

அரவப்பகை

கருடன்.

அரவமின்

நாகலோகப்பெண்.

அரவாய்க்கடிப்பகை

வேப்பிலை.

அரவிந்தலோசனன்

விட்டுணு.

அரவிந்தாக்கன்

விட்டுணு.

அரவீசம்

பாதரசம்.

அரவெனுந்துதி

கருமசாந்தி.

அரளித்தொக்கு

பீநாறிப்பட்டை.

அரனிடத்தவள்

பார்ப்பதி.

அரன்வெற்பு

கயிலைமலை.

அராகவொத்தாழிசைக் கலிப்பா

வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பா.

அராக்கோன்

இராகு, கேது.

அராதி

சத்துரு.

அராத்திரி

கைலாசமலை.

அராத்துதல்

அராத்தல்.

அராத்துதல்

திரும்ப திரும்பத் சொல்லி அல்லது கேட்டுத் தொந்தரவு செய்தல், தேவையில்லாமல் சண்டைக்கு போதல்

அராமுனி

பதஞ்சலிமுணி.