அ - வரிசை 17 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அடிப்படைவாதம்

ஒரு மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மாற்றத்திற்கு உட்படாதவை என்று வலியுறுத்துவதும்,அவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதும், அவற்றுக்கு மாறானவற்றை எதிர்ப்பதுமான போக்கு

அடிப்படைவாதி

அடிப்படைவாதத்தைக் கடைப்பிடிப்பவர்

அடிப்புக்கூலி

கதிர் அடிப்பதற்காகத் தரப்படும் கூலி

அடிபட்டுப்போ

எடுபடாமல் போதல்

அடிபடு

(விபத்தில்)நசுக்கப்படுதல்
(வாழ்க்கையில்) பல பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவித்தல்
(பரவலாக)குறிப்பிடப்படுதல்,பேசப்படுதல்

அடிபணி

அதிகாரத்துக்கு அடங்கிப்போதல்

அடிபம்பு

அடிகுழாய்

அடிபாடு

1.போர், 2.சண்டை

அடிபிடி

1.(சமைக்கும்போது)அதிகமான வெப்பத்தால் உணவுப் பொருள் கருகிப் பத்திரத்தின் அடியில் படிதல் 2.அடிதடி 3.(சண்டை போடும் நோக்கத்தோடு) ஆவேசமாக எழுப்பும் குரல்

அடிபோடு

முன்னேற்பாடாக ஒன்றைச் சொல்லுதல் அல்லது செய்தல்
திட்டம் போடுதல்

அடிமட்டம்

ஒரு அடி நீளமுள்ள அளவுகோல்

அடிமடையன்

அடிமுட்டாள்,கொஞ்சம்கூட அறிவில்லாத நபர்

அடிமண்டி

மண்டி,(பாத்திரத்தின் அடியில் சிறிதளவு உள்ள)கலங்கிய நிலையில் இருக்கும் திரவகம்

அடிமனம்

ஆழ்மனம்

அடிமனை

கட்டடம் கட்டப்பட்டிருக்கும் மனை

அடிமாட்டு விலை

(பொருளின் உண்மையான மதிப்பிற்குப் பொருந்தாத)மிகக் குறைந்த விலை

அடிமாடு

(உழுதல் வண்டியிழுத்தல் போன்ற) வேலைகளைச் செய்ய முடியாத, இறைச்சிக்காகக் கொல்லப்படும் கிழட்டு மாடு

அடிமானம்

பெருக்கப்பட வேண்டிய தடவைகளை அடுக்காகக் கொண்ட எண்

அடிமேல் அடி

அடுத்தடுத்து வரும் துன்பம்

அடிமை

(முற்காலத்தில்)தன்னுரிமை இழந்து பிறருக்கு உடமையாக இருந்த பணியாள்