அ - வரிசை 169 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரணிய

அரணையுடைய
காவலையுடைய. அரணிய விலங்கை (பாரத. இரா.67)

அரணியகதலி

காட்டுவாழை.

அரணியசடகம்

காட்டுக்கவுதாரி.

அரணியசாரணை

காட்டிஞ்சி.

அரணியவரணி

பெருங்காடு.

அரணியானி

பெருங்காடு.

அரணிருக்கை

கோட்டை.

அரதேகி

அகதேதி.

அரதைப்பெரும்பாழி

ஒருதலம்.

அரத்தகம்

செம்பஞ்சு.

அரத்துறை

ஒரு சிவஸ்தலம்.

அரத்தோற்பலம்

செங்கழுநீர், செங்குவளை.

அரபீசம்

பாதரசம்.

அரப்பள்ளியான்

சர்ப்பசயனனாகியவிட்டுணு.

அரப்பிரியை

உமாதேவி.

அரமி

கடுக்காய்.

அரரி

கதவு.

அரரு

சத்துரு.

அரவக்கிரி

வேங்கடமலை.

அரவக்கொடியோன்

துரியோதனன்.