அ - வரிசை 168 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரங்கொழிசெய்யுள்

புறநாடக உருக்களுள் இறுதியுறு.

அரசச்சின்னம்

ராசரீக அடையாளம்.

அரசபரி

இராக்குதிரை.

அரசர்பா

அகவற்பா.

அரசர்பின்னோர்

வணிகர்.

அரசளித்தல்

ஆளல்.

அரசனாணை

இராசகட்டளை.

அரசனுயிர்காத்தோன்

காண்டாமிருகம்.

அரசன் விருத்தம்

ஒருபிரபந்தம்.

அரசாளல்

இராச்சியமாளல்.

அரசாளுகை

இராச்சியஞ்செய்கை.

அரசாளுதல்

அரசுசெய்தல்.

அரசியானை

அரசுவா.

அரசிருக்கை

சிம்மாசனத்திருக்கை.

அரசிருப்பு

அரசிருக்குமிடம்.

அரசிலியை

ஒருசிவஸ்தலம்.

அரசுகட்டில்

சிங்காசனம்.

அரசுநீழலிருந்தோன்

புத்தன்.

அரணாசவிஞ்ஞை

அக்ஷரக்குறி.

அரணித்தபரு

கட்டி.