அ - வரிசை 167 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அயிர்க்கடு | அங்குசம். |
அயிர்ப்பு | சந்தேகம். |
அயிலிடம் | சிற்றரத்தை. |
அயிலேயம் | முசுமுசுக்கைக்கொடி. |
அயில்வித்தல் | உண்பித்தல். |
அயிற்கடு | அங்குசம். |
அயின்றல் | உண்டல். |
அயோகவியவச்சேதம் | இயைபின்மைநீக்குதல். |
அயோகவிவச்சேதம் | தெளிவேகாரம். |
அயோமலம் | இரும்புக்கிட்டம். |
அயோமுகி | ஓரரக்கி. |
அயோற்சம் | அரப்பொடி. |
அய்யலி | சிறுகடுகு. |
அரக்கியர் | இராக்கதப் பெண்கள். |
அரக்கில் | அரக்கு மாளிகை. |
அரக்கினிரதம் | கொம்பரக்கு கஷாயம். |
அரக்குக்காந்தம் | ஒருமருந்துக்கள். |
அரக்குநீர் | இரத்த நீர். |
அரங்க | முற்றாக. |
அரங்கபூமி | நாடகசாலை, போர்க்களம். |