அ - வரிசை 166 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அயர்க்குதல்

மறத்தல்.

அயர்ந்த நித்திரை

மிக்க நித்திரை.

அயர்ந்தீகம்

செய்வோம்.

அயலி

வெண்கடுகு.

அயவணம்

ஒட்டகம்.

அயவந்தி

ஒருசிவத்தலம்.

அயவு

அகலம்.

அயன்மனைவி

சரச்சுவதி.

அயன்முகத்துதித்தோர்

பார்ப்பார்.

அயன்வாவி

மானதம்.

அயன்றோளுதித்தோர்

அரசர்.

அயாசகம்

அயாசதுபிச்சை.

அயாசகன்

இரந்துகேளாதவன்.

அயானம்

சுபாவம்.

அயிங்கிதை

கொல்லாமை.

அயிஞ்சை

கொல்லாமை.

அயிப்பை

ஒருசெடி.

அயிராச்சுரபி

காமதேனு.

அயிராணிகேள்வன்

இந்திரன்.

அயிராவச்சுரவி

காமதேனு.