அ - வரிசை 165 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அம்மிலசாரம் | காடி. |
அம்முக்கள்ளன் | வஞ்சகன். |
அம்மைக்குண்டலி | தாயாகிய குண்டலிசத்தி. |
அம்மைபார் கூந்தல் | கொடியார் கூந்தற்பூண்டு. |
அயக்காந்தம் | உகிக்காந்தம். |
அயக்கிரீவகன் | திருமால். |
அயக்கிரீவன் | ஓரசுரன், விட்டுணு. |
அயக்கீடம் | இரும்புக்கறை. |
அயசிலவேதை | கோளகபாஷாணம். |
அயகீசம் | அயம். |
அயதார்த்தம் | பொய். |
அயத்தின்சாரம் | இருப்புச்சிட்டம். |
அயபானி | ஒரு செடி. |
அயமகம் | அசுவமேதயாகம். |
அயமணல் | அயமலை. |
அயமாரணம் | அரசமரம். |
அயமாரம் | அலரி. |
அயமுகம் | ஓரிருக்கை. |
அயமேதம் | அசுவமேதயாகம். |
அயம்பற்றி | காந்தம். |