அ - வரிசை 161 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அமுதசருக்கரை | சீந்தின்மா. |
அமுதசுறா | வெள்வேல். |
அமுததரம் | மஞ்சிட்டி. |
அமுதுபுட்பம் | சிறுகுறிஞ்சா. |
அமுதவேணி | சிவன். |
அமுதாசனர் | அமிர்தாசனர். |
அமுதாம்பரமணி | கெளத்துவமணி. |
அமுதுசெய்தல் | புசித்தல். |
அமுதுததி | பாற்படல். |
அமுதுபடி | அரிசி. |
அமுதுமோர் | பிரைமோர். |
அமுதுறை | எலுமிச்சைக்கனி. |
அமுத்திர | அங்கே, மறுமையில். |
அமுத்திரம் | மோட்சம். |
அமுறை | பூசினிமொக்கு. |
அமூர்த்தித்துவம் | உருவமில்லாததன்மை. |
அமெந்துக்கொட்டை | வாதுமைக் கொட்டை. |
அமேதநீக்கி | கற்றாழை. |
அமைச்சி | அண்டவாதம். |
அமைப்போன் | கருத்தா செய்பவன். |