அ - வரிசை 160 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அமிர்தசோதரம் | குதிரை. |
அமிர்ததரங்கிணி | நிலவு. |
அமிர்தபலம் | நெல்லிக்காய். |
அமிர்தவல்லி | சீந்திற்கொடி. |
அமிர்தாகரணன் | கருடன். |
அமிர்தாமிர்தை | பஞ்சசத்தி கலைகளுளொன்று. |
அமிர்தாரிவளை | சங்கநிதி. |
அமிர்தாவல் | ஆசைப்பெருக்கம். |
அமிர்தூட்டல் | பாலூட்டல். |
அமிர்த்தரங்கிணி | சந்திரகிரணம். |
அவிழ்வித்தல் | அமிழச்செய்தல். |
அமுக்கனங்கிழங்கு | அசுவகெந்தி. |
அதுக்கிரா | அசுவகெந்தி. |
அமுக்கிரி | அசுவகெந்திக் கிழங்கு. |
அமுணங்கம் | அடக்கமின்மை. |
அமுதகதிரோன் | சந்திரன். |
அமுதகிரணன் | சந்திரன். |
அமுதகுண்டை | இரப்போர்கலம். |
அமுதகுலர் | இடையர், சான்றோர். |
அமுதசம்பூதனம் | சந்திரன். |