அ - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடிசக்கை | பாராட்டை அல்லது வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல் |
அடிசக்கை | செய்தி ஒன்றை கேள்விப்படும் பொழுது அது தொடர்பில் சந்தோசத்தை வெளிப்படுத்தும் முறை |
அடித்தடி | (ஒன்றை அளக்கப் பயன்படும்)அளவுகோல் |
அடித்தல் திருத்தல் | பிரதியில் ஏற்படும் தவறுகளை நீக்குதலும் மாற்றி எழுதுதலும் |
அடித்தளம் | (கப்பலின்)கீழ்த்தளம் |
அடித்து | வலியுறுத்தி |
அடித்துக்கொண்டு செல் | (வெள்ளம் காற்று முதலியன)இழுத்துக்கொண்டு போதல் |
அடித்துக்கொள் | சண்டை போடுதல் |
அடித்துக்கொள்ள | (ஒரு துறை,திறமை போன்றவற்றில் ஒன்றை அல்லது ஒருவரை)மிஞ்சுவதற்கு |
அடித்துப்பிடித்து | பலவகையிலும் சிரமத்துடன் முயன்று |
அடித்துமூடு | (குறிப்பிட்ட பிரச்சினை அல்லது கேள்வி போண்றவை மீண்டும் எழாதவாறு) உறுதியாக முடிவுக்குக் கொண்டுவந்துவிடல் |
அடித்தொண்டை | உரக்கக் கத்தும்போது ஒலிபிறக்கும் இடமாகக் கருதப்படும்தொண்டையின் பகுதி |
அடிதடி | சண்டை |
அடிநாதம் | (கருத்து வளர்ச்சி போன்றவை)வெளிப்படையாக இல்லாமல் உள்ளடங்கி அமைந்திருப்பது |
அடிப்படை | ஒன்றுக்கு மிக ஆதாரமானது |
அடிப்படை உரிமை | கருத்து,எண்ணம் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் அல்லது வசிப்பிடம்,தொழில் மதம் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரமாகச் செயல்பட அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உத்தரவாதமாகத் தரும் உரிமை |
அடிப்படை உறுப்பினர் | கட்சி அல்லது சங்கத்தின் சாதாரண உறுப்பினர் |
அடிப்படைக் கல்வி | அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் அளிக்கும் கல்வி |
அடிப்படைச் சம்பளம் | படி எதுவும் சேராத ஊதியம் |
அடிப்படை வசதி | வசிக்கும் அல்லது தங்கும் இடத்தில் இருக்க வேண்டிய தண்ணீர்,மின்சாரம் போன்ற ஆதார வசதிகள் |