அ - வரிசை 157 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அப்பிராமாணிக்கம்

அப்பிரமாணிக்கம்.

அப்பிரியதரு

ஒதிய மரம்.

அப்பிரியன்

சத்துரு.

அப்பிரீதி

சத்துழி.

அப்பிருதக்கு

உடனாக, கூட்டமாகவெவ்வேறன்றி.

அப்பீரகம்

புளிமா.

அப்புக்காய்

ஒருவிதக்காய்.

அப்பத்திரட்டி

கட்டுக்கொடி.

அப்புருவம்

உட்பு, நவசாரம்.

அப்புவின்கோபம்

சேத்துமம்.

அப்புளண்டம்

தகரை.

அப்புறப்படுதல்

இடமாற்றுதல்.

அப்புறாத்துணி

சரகாண்ட பாஷாணம்.

அப்பைக்காய்

கொவ்வங்காய்.

அப்பைக்கோவை

ஒருவகைக் கோவைக்கொடி.

அப்பிரத்துத்பிரபஞ்சாலங்காரம்

புனைவிலிபுகழ்ச்சியணி.

அப்ரமாணம்

அப்பிரமாணம்.

அமடுபண்ணல்

ஆசைக்காட்டித்தீமைக்கேவுல்.

அமண்டலம்

ஆமணக்கு.

அமந்தலம்

செங்கத்திரிச்செடி.