அ - வரிசை 156 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அப்பிரசாதம் | தயவின்மை. |
அப்பிரசாதை | மலடி. |
அப்பிரதாபம் | எளிமை, மங்கல். |
அப்பிரதானிசம் | கொடாமை. |
அப்பிரதிகரம் | ஒரு நரகம். |
அப்பிரதிகாரம் | பதிலின்மை. |
அப்பிரதிபத்தி | அசட்டை, தவறு, நிதானிப்பின்மை. |
அப்பிரதிரதன் | யுத்தவீரன். |
அப்பிரதிரூபம் | நிகரில்லாதது. |
அப்பிரத்தியயம் | சந்தேகம். |
அப்பிரத்தியவாயம் | குறைதலின்மை. |
அப்பிரநாகம் | அயிராவதயானை. |
அப்பிரபுட்பம் | நீர். |
அப்பிரமாணன் | கடவுள். |
அப்பிரமாணிக்கன் | பொய்யன். |
அப்பிரமாதம் | சுறுசுறுப்பு. |
அப்பிரமாலை | மேகசமூகம், மேசநிரை. |
அப்பிரமுப்பிரியம் | அயிராவதயானை. |
அப்பிராணம் | மரணம். |
அப்பிராப்பியம் | அடையத்தகாதது. |