அ - வரிசை 15 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடாவடித்தனம் | நியாயமின்றியும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளும் தன்மை |
அடி | கையால்/தடியால் அறைதல் ,ஒன்றை மற்றொன்றின்மீது பலமாக அறைதல் |
அடி | சந்ததி |
அடிக்க | அடித்துக்கொள்ள |
அடிக்கட்டை | 1. (அறுவடைக்குப் பிறகு)நிலத்தில் எஞ்சி இருக்கும் பயிர்களின் அடிப்பகுதி 2.வழங்கப்படும் நுழைவுச் சீட்டு, காசோலை முதலியவற்றின் விபரங்கள் அடங்கிய,வழங்குபவர் தன்வசம் வைத்திருக்கும் பகுதி |
அடிக்கடி | அதிகத்தடவை,பலமுறை |
அடிக்கயல் | உடைத்த தேங்காயின் இரு மூடிகளில் கண் இல்லாத பகுதி |
அடிக்கரும்பு | 1.மிகுந்த இனிப்புச்சுவை உடைய கரும்பின் அடிப்பகுதி 2.(வெட்டியெடுத்த பிறகு)பூமியில் எஞ்சியிருக்கும் கரும்பின் அடிப்பகுதி |
அடிக்கல் | கட்டுமானப் பணியின் துவக்கமாக நடத்தும் சடங்கில் வைக்கப்படும் கல் |
அடிக்கிற | (கண்ணை உறுத்துகிற அளவுக்கு)அடர்ந்த வண்ணத்தில் |
அடிக்குரல் | கீழ்த்தொண்டையில் இருந்து வெளிப்படும் குரல் |
அடிக்குறிப்பு | (நூல் கட்டுரை முதலியவற்றின் பக்கங்களின்)கீழ்ப்பகுதியில் தரப்படும் துணைச் செய்திகள் |
அடிக்கொருதரம் | (குறுகிய கால இடை வெளியில்)சிறிது நேரத்துக்கு ஒரு முறை |
அடிக்கோடு | (நினைவில் கொள்வதற்காக அல்லது வலியுறுத்திக் காட்டுவதற்காக)சொல் தொடர் முதலியவற்றின் கீழ் போடப்படும் கோடு |
அடிகள் | துறவறம் மேற்கொண்டவர்களை அல்லது துறவிபோல் மதிப்புமிக்கவர்களை மரியாதையுடன் குறிக்கப் பயன்படுத்தும் சொல் |
அடிகுழாய் | கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன்மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய் |
அடிகொடி | ஒருவரின் குடும்பம்,பரம்பரை,அந்தஸ்து போன்றவற்றைப் பற்றிய தகவல் |
அடிகோலு | அடிப்படையாக அமைதல்,வழிவகுத்தல் |
அடிச்சுவடு | வகுத்துக்காட்டிய வழி |
அடிச்சொல் | வேர்ச்சொல் |