அ - வரிசை 148 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அந்திரன் | வேடன். |
அந்திவண்ணர் | சிவன். |
அந்தீகிருதன் | குருடனாக்கப்பட்டவன். |
அந்தீபூதன் | குருடனானவன். |
அந்துளியிந்துளியாத்தல் | சூறையாடல், பதைபதைத்தல். |
அந்தேசாலம் | தேற்றா. |
அந்தேவாசி | சண்டாளன், மாணாக்கன். |
அந்தை | ஒரு நிறை. |
அந்நியபுட்டம் | குயில். |
அந்நியோன்னியம் | ஒற்றுமை, ஐக்கியம். |
அபகடம் | அவகடம். |
அபகருடசமை | அபகர்டசமை. |
அபகளங்கம் | நீங்காவசை |
அபகாரகன் | திருடன். |
அபகுண்டனம் | சுற்றல். |
அபக்கிரமம் | புகலிடம், போதல். |
அபக்கிரியை | தீங்கு, துற்செய்கை. |
அபசதம் | கீழ்மை. |
அபசித்துமூர்த்தம் | எட்டாமூர்த்தம். |
அபஞ்சீகிருதபூதம் | தன்மாத்திரை. |