அ - வரிசை 147 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அந்தர்க்கீருகம்

உள்வீடு.

அந்தர்ச்சடரர்

இரைக்குடர்.

அந்தர்த்தானம்

உள், மறைவிடம்.

அந்தர்த்துவாரம்

உட்கதவு.

அந்தர்நியமனம்

உள்ளேயடக்குதல்.

அந்தர்ப்பாவிதகருமம்

அகநிலைச்செயப்படுபொருள்.

அந்தர்ப்பிரகிருதி

உள்ளிந்திரியம்.

அந்தர்ப்பூதம்

உள்ளிருப்பது.

அந்தர்முகம்

உண்ணோக்கியமுகம்.

அந்தர்யசனம்

அந்தரியாகம்.

அந்திக்கைக்கிளை

அந்தரகாந்தாரம்.

அந்திகாசிரயம்

தாவரம்.

அந்திகோன்

சந்திரன்.

அந்திசந்தி

எப்போதும், காலைமாலை.

அந்திப்பொழுது

மாலைக்காலம்.

அந்தியகருமம்

சாச்சடங்கு.

அந்தியகாலம்

மரணகாலம்.

அந்தியகிரியை

அந்தியகருமம்.

அந்தியசர்

புலையர்.

அந்திரக்கண்மணி

நீலக்கல்.