அ - வரிசை 143 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அநுவருத்தி

அனுசரித்தல்.

அநுவருத்தித்தல்

தொடருதல்.

அநுவாகாரியம்

அன்னுவாகாரியம்.

அநுவாசிதம்

வாசனையூட்டப்பட்டது.

அநுவாதம்

அநுவாதம் செய்பவன்,சமணரிலொருவன்.
சம்மதம், நிந்தித்தல், முன்னர்க்கூறிய ஒருபொருளை ஓர் நிமித்தத்தாற் பின்னுமெடுத்துக் கூறுதல்.வாதிகூறிய பொருளை நீ யிவ்வாறுகூறினையெனக்கண்டனஞ் செய்யும்பொருட்டுப் பிரதிவாதியுங்கூறல்.அநுவாதி

அநுவாதம்

அநுவாதம் செய்பவன்,சமணரிலொருவன்
சம்மதம், நிந்தித்தல், முன்னர்க்கூறிய ஒருபொருளை ஓர் நிமித்தத்தாற் பின்னுமெடுத்துக் கூறுதல்.வாதிகூறிய பொருளை நீ யிவ்வாறுகூறினையெனக்கண்டனஞ் செய்யும்பொருட்டுப் பிரதிவாதியுங்கூறல்.அநுவாதி

அநுவாதேயம்

அங்கீகரிக்கப்படாதது.

அநுவாரோகணம்

அன்னுவாரோகணம்.

அநுவிதாயினீ

அனுசரிப்பது, இணங்கியது.

அநுவுரு

ஒத்தரூபம்.

அநுவுலோமன்

அநுலோமன்.

அநுற்பூதம்

காணப்படாதது.

அநூபசம்

இஞ்சிப்பூண்டு.

அநூர்த்துவாத்தி

மேற்கதுப்பினெலும்பு.

அநேகமூர்த்தி

கடவுள்.

அநேகர்

பலர்.

அநேகன்

பலவடிவம், பலவுருவம்.
கடவுள், பசுவாகிய ஆன்மா, பல யோனிகளிலும் நிற்பவன்.அநேகாகாரம்

அநேகாங்கம்

அநேகாங்கவுருவகம், பலஅங்கம்.

அநேகாந்தவாதம்

ஆருகதவாதம்.

அநேகாந்தவாதி

ஆருகதன்.