அ - வரிசை 142 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அநுமக்கொடியோன் | அருச்சுனன். |
அநுமசந்தேகம் | அனுமார் தூது, ஒரு நூல். |
அநுமந்தன் | அனுமான். |
அநுமந்திரு | இணங்குதல். |
அனுமானப்பிரமாணாலங்காரம் | அனுமானப் பிரமாணவணி. |
அநுமானாநுமானம் | கருதலனுமானம். |
அநுமானாபாசம் | அனுமானப்போலி. |
அநுமானிதம் | குதிரைக்கனைப்பு. |
அநுமானோத்தி | அனுமானித்துப்பேசுதல். |
அநுயோசனம் | வினா. |
அநுரநசம் | ஏகாந்தம். |
அநுரஞ்சனம் | நேசித்தல். |
அநுராகபோகம் | காமபோகம், காமவனுபவம். |
அநுராகம் | ஆசை. |
அநுரோதகம் | இணங்குதல். |
அநுர்தம் | பொய். |
அநுலேபனம் | பூசுதல். |
அநுலோமசன் | அனுலோமன். |
அநுலக்கிரகம் | அநுவக்கிரகம். |
அநுவமிசம் | வமிசவரலாறு. |