அ - வரிசை 141 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அநுதோடம்

உபபாதகம்.

அநுத்தரோபபாதிக தசாங்கம்

அங்காகமத்தினொரு பகுப்பு.

அநுத்திரபஞ்சமம்

அயிர்ப்பு.

அநுத்துவயம்

இருகதுப்பு.

அநுத்துவேகம்

ஆவலின்மை.

அநுபந்தை

தாகம், விக்கல்.

அனுபபத்திப்பிரசங்கம்

முற்றுப்பெறாததாதல்.

அநுபலத்தம்

அடையாமை, காணப்படாதது.

அநுபலத்தியலங்காரம்

நுகர்ச்சியின்மையணி.

அநுபவப்படல்

உற்றறிதல்.

அநுபவிப்பு

அநுபோகம்.

அநுபவியம்

அநுபவிக்கப்படுவது.

அநுபாகம்

அலகுக்குரிய பாகம்.

அநுபாதேயன்

அங்கீகரிக்கப்படக்கூடாதவன்.

அநுபூதிகம்

அநுபவிக்கத்தக்கது.

அநுபூதியநுசூதம்

அநுபவசித்தி.

அநுபோகி

அனுபோகங்கொள்ளுவோன்.

அநுப்பிரமாணம்

அளவானது, இசைவானது.

அனுப்பிரவிட்டம்

உட்புகுதல்.

அநுப்பிரவேசி

உமாதேவி.