அ - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடங்கன் முறை | முதல் ஏழு திருமுறைகளின் தொகுப்பு |
அடங்காப்பிடாரி | யாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய பெண் அல்லது சிறுவன் |
அடங்காமாரி | அடங்காப்பிடாரி |
அடங்கு | (கோபம்,தாகம்,ஆசை,வேகம் முதலியவற்றின் தீவிரம்)தணிதல்,குறைதல் |
அடடா | வியப்பு,வருத்தம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல் |
அடப்பம் | அடர்த்தி |
அடப்பம் | தேங்காயின் உள்ளீடு முதலியவற்றின் அடர்த்தி |
அடம் | சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை |
அடம்பிடி | பிடிவாதம் காட்டுதல் |
அடமானம் | (நிலம்,வீடு முதலிய சொத்துகளை)ஈடாக வைத்துப் பணம்பெறும் முறை,அடகு |
அடர் | இடைவெளி இல்லாமல் செறிந்திருத்தல் |
அடர்த்தி | 1. செறிவு,நெருக்கம், 2. (நிறத்தைக் குறிப்பிடும்போது) வெளிறியதாக இல்லாமல் ஆழ்ந்ததாக இருப்பது ,3. குறிப்பிட்ட ஒரு கன பரிமாணத்தில் செறிந்திருக்கும் பொருளின் நிறை |
அடர்ந்த | நெருக்கமான,அடர்த்தியான |
அடர்வு | அடர்த்தி |
அடவு | பாட்டு இல்லாமல் சொற்கட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்ட அங்க அசைவு |
அடவோலை | (வீடு நிலம் போன்றவற்றை)குத்தகைக்கு விடும்போது இரு தரப்பினரும் செய்துகொள்ளும் ஒப்பந்தப்பத்திரம் |
அடாத்து | அடாவடித்தனம் |
அடாத | தகாத,முறையற்ற |
அடாப்பழி | அபாண்டமான பழி,வீண் பழி |
அடாவடி | (பிறரை மிரட்டுகிற)முரட்டுத்தனம் |