அ - வரிசை 139 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அநிருமலம் | அழுக்கு. |
அநிர்வசனியம் | வசனிக்கப்படக் கூடாதது. |
அநிலசகன் | நெருப்பு. |
அநிலசம் | செம்முகக்குரங்கு. |
அநிலச்சூலை | வாதசூலை. |
அநிலாசனம் | உபவாசம். |
அநிலாத்துமகன் | அனுமான், வீமன். |
அநிலாமயம் | வாதநோய். |
அநிலி | சோதிநாள். |
அநிவாரிதம் | தடுக்கப்படாதது. |
அநுகதநம் | சம்பாஷணை. |
அநுகம் | செஞ்சந்தனம். |
அநுக்கம்பை | அநுக்கிரகம், இரக்கம். |
அநுகரணவோசை | ஒலிக்குறிப்பு. |
அநுகவீனன் | இடையன். |
அநுகிருதி | அநுகரணம், ஒத்த செய்கை. |
அநுகூலர் | அனுகூலமுடையவர். |
அநுகூலி | சகாயஞ்செய்வோன். |
அநுக்காரம் | ஒப்புமை. |
அநுக்கிரககர்த்தா | அனுக்கிரக கிருத்தியம் செய்யுங் கடவுள். |