அ - வரிசை 138 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அநாதிசித்தன்

அருகக்கடவுள்.

அநாதிசைவன்

சதாசிவமூர்த்தி.

அநாதிபெத்தசித்து

அநாதியே ஆணவமலத்திலே கட்டுண்டு கிடந்த ஆன்மா.

அநாதிரேக்கியம்

மிகுதியின்மை.

அநாத்தை

அவசங்கை, நிலையின்மை.

அநாமயம்

நோயின்மை.

அநாமை

அநாமிகை.

அநாரம்பம்

தொடக்கமின்மை.

அநாரியதித்தம்

நிலவேம்பு.

அநாரோக்கியம்

நோய்.

அநிகர்

சேனையானோர்.

அநிச்சிதம்

நிச்சயிக்கக்கூடாதது.

அநிட்டநிவர்த்தி

வேண்டாதனவொழிதல்.

அநித்தியகாலம்

முடிவுகாலம்.

அநித்தியசமாசம்

நித்தியசமாசமில்லாத சமாசம்.

அநிமாவினம்

சாவு.

அநிமீலனம்

இறவாமை.

அநிமேடம்

பிசாசு, மீன்.

அநிருதவாதி

பொய்பேசுவோன்.

அநிருத்தபதம்

ஆகாயம்.