அ - வரிசை 136 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அநந்தசயனன்

சேடசயனன், விட்டுணு.

அநந்தசாயி

விட்டுணு.

அநந்தசீரிடை

வாசுகியின் மகன்.

அநந்தசொரூபி

கடவுள்.

அநந்தஞானம்

வரம்பிலா அறிவு.

அநந்ததரிசனம்

வரம்பிலாக்காட்சி.

அநந்ததிட்டி

இந்திரன், சிவன்.

அநந்ததீர்த்தகிருத்து

பதினான்காஞ்சமணதீர்த்தகன்.

அநந்தநாதன்

சருவேசன்.

அநந்தநான்மை

அனந்தசதுட்டயம்.

அநந்தலோசனன்

கடவுள், புத்தன்.

அநந்தவிபவை

பார்வதி.

அநந்நியசன்

மன்மதன்.

அநந்நியை

அபின்னாசத்தி.

அநந்வயாலங்காரம்

இயைபின்மையணி.

அநபிகிதகருத்தன்

அநபிகிருதகருத்தா.

அநபேட்சன்

ஆசையில்லாதவன்.

அநப்பியாசம்

அப்பியாசமின்மை.

அநம்

சோறு.

அநர்க்களம்

தடையின்மை.