அ - வரிசை 134 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அத்தியாவசியகம்

மிகுந்த அவசியம்.

அத்தியாவாகனிகம்

சீதனம்.

அத்தியான்மிகம்

அத்தியாத்துமிகம்.

அத்தியான்மீகநூல்

மூவகைச் சாத்திரம்.

அத்தியுத்தி யலங்காரம்

மிகுதிநவிற்சியணி.

அத்தியூடன்

சிவபெருமான்.

அத்திரசத்திரம்

அம்பும், வாளும்.

அத்திரசந்தானம்

அம்பின் தொடர்ச்சி.

அத்திரசாஸதிரம்

வில்வித்தை.

அத்திரத்தாமன்

அசுவத்தாமன்.

அத்திரப்பிரயோகம்

அம்புசெலுத்தல்.

அத்திரயூகம்

ஒருவகைப் படைவகுப்பு.

அத்திரா

அரசு.

அத்திராசாரம்

ஆயுதசாலை.

அத்திரிகீலை

பூமி.

அத்திரிகை

ஓரப்சரப்பெண்.

அத்திரிசாரம்

இரும்பு.

அத்திரிசிருங்கம்

சிகரம்.

அத்திரீசன்

இமையம், சிவன்.

அத்திரோகம்

மெத்தெனவு.