அ - வரிசை 133 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அத்தியந்தகோபம்

மிகுகோபம்.

அத்தியந்தகோபனம்

அதிகக்கோபம்.

அத்தியந்தபாவம்

முழுதுமின்மை.

அத்தியவசம்

மிகவும் அவசமாதல்.

அத்தியவசாயினி

விஷயநிச்சயஞ்செய்யுமது.

அத்தியற்புதம்

மிக்க ஆச்சரியம்.

அத்தியாகாரி

மிகப்புசிக்கிறவன்.

அத்தியாசநம்

ஏகோத்திட்டம்.

அத்தியாசிரம பாவனை

பிராமியபாவனை.

அத்தியாசை

அதிக ஆசை.

அத்தியாச்சியம்

விடப்படக்கூடாதது.

அத்தியாச்சிரமம்

ஆச்சிரமங்களைக்கடந்தநிலை.

அத்தியாச்சிரமயோகசன்னியாசி

பாராமேசுவரி பாவனையில் நிற்பவன்.

அத்தியாச்சிரமயோகி

மூவகையோகிகளுள் ஒருவன்.

அத்தியாத்தும ஞானம்

பரமான்மாவைஅறியும் அறிவு.

அத்தியாத்தும தத்துவநூல்

அத்தியாத்துமஞான சாத்திரம்.

அத்தியாத்துமா

சீவான்மா, பரமான்மா.

அத்தியாத்துமிகநூல்

அத்தியான் மிகநூல்.

அத்தியாபிதம்

படிக்கப்பட்டது.

அத்தியாயநம்

அத்தியயநம்.