அ - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அட்டவணை இனம் | (அரசின் கணிப்பில்)சமூக மற்றும் கல்வி ரீதியில் முன்னேற்றத்துக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்றும் வேலைவாய்ப்பு,தேர்தல் ஆகியவற்றில் ஒதுக்கீடு பெறுவதற்காகவும் அரசியல் சட்டம் வழிவகுத்ததன் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள இனத்தவர் |
அட்டவணைப்படுத்து | (எண்கள் தகவல்கள் போன்றவற்றை)வரிசைப்படி அல்லது வகைப்படி பட்டியலாக அமைத்தல் |
அட்டாலை | (பெரும்பாலும் சமையலறையில்) அடுப்புக்கு மேலெ அமைக்கப்படும் பரண் |
அட்டி | மறுப்பு, தடை |
அட்டிகை | (பெர்ம்பாலும் கல் பதித்த) கழுத்தோடு ஒட்டி அணியும் நகை |
அட்டியல் | அட்டிகை |
அட்டூழியம் | கொடிய செயல் |
அட்டை | வார இதழ்,புத்தகம் முதலியவற்றின் முன்பக்க ,பின்பக்கத் தாள் |
அட | வியப்பு,எரிச்சல்,சலிப்பு போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்க வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல் |
அடக்கம் | முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை,பணிவு |
அடக்கமாக | வேறு யாருக்கும் தெரியாமல், கமுக்கமாக |
அடக்கவிலை | (பொருளை) உற்பத்தி செய்ய ஆகும் செலவு, |
அடக்கவொடுக்கம் | (நடத்தையில் காட்டும்)பணிவு |
அடக்கி வாசி | இயல்பாக அல்லது அடக்கத்தோடு செய்தல் |
அடக்கு | (சிரிப்பு, கோபம்,பேச்சு முதலியவற்றை)வெளிப்படாமல் தடுத்தல் அல்லது கட்டுப்படுத்தல் |
அடக்குமுறை | அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை |
அடகு | (நகை,பாத்திரம்)போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை/பொருளை ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை |
அடங்கல் | ஒரு நிலத்தின் எண், வகை, பரப்பு,தீர்வை,ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர், அறுவடை மாதம் முதலியவை ஆண்டுவாரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடு |
அடங்கலாக | உள்ளடக்கி,சேர்த்து |
அடங்கலும் | உட்பட அனைவரும்,எல்லாரும் |