அ - வரிசை 122 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அண்டகோளம் | அண்டவுண்டை |
அண்டசன் | பிரமா. |
அண்டசை | கத்தூரி. |
அண்டச்சுவர் | பித்திகை |
அண்டரதன் | சிவன். |
அண்டநாயகி | உமாதேவி. |
அண்டப்புத்தேள் | விராட்புருடன். |
அண்டமீன்றவன் | பிரமா. |
அண்டமுகடு | அண்டத்தினுச்சி. |
அண்டமூர்த்தி | அண்டரூபி. |
அண்டரசம் | சுத்தரசம். |
அண்டரண்டப்பட்சி | பெரும்பறவை. |
அண்டரண்டம் | தேவரண்டம். |
அண்டர்நிலை | பொன்னாங்காணி. |
அண்டர்பிரான் | சிவபெருமான். |
அண்டவாணர் | ஆகாயவாசிகள் |
அண்டவாணன் | தேவன். |
அண்டவாயு | அண்டவாதம், ஒருநோய். |
அண்டன் | கர்த்தா, சிவன். |
அண்டாகாரம் | முட்டைவடிவம். |