அ - வரிசை 121 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அணுக்கத்தொண்டர் | சமீபமாயுள்ளசீடர். |
அணுக்கர் | சிநேகர். |
அணுக்கு | சமீபம். |
அணுத்துவம் | அணுத்தன்மை. |
அணுபட்சம் | ஆன்மபட்சம். |
அணுபரசிவன் | அணுபட்சத்துப் பரசிவன். |
அணுப்பிரமன் | ஆன்மபட்சப்பிரமன். |
அணுமூர்த்தி | ஆன்மமூர்த்தி. |
அணுரூபி | ஆன்மா, கடவுள். |
அணுரேணு | சிறுதுகள். |
அணுவலி | ஆன்மசத்தி. |
அணுவெழுத்து | இனவெழுத்து. |
அணைக்கட்டல் | வரம்புகட்டல். |
அணைக்கை | அணைத்தல். |
அணுசொல் | அசைச்சொல், துணைச்சொல். |
அணைதறி | யானைகட்டுங்கயிறு. |
அணைதுகில் | ஏணையாடை. |
அணையார் | பகைவர். |
அண்டகன் | அண்ணகன். |
அண்டகோளகை | அண்டகடாகம்,கூடம். |