அ - வரிசை 120 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அணங்கயர்தல் | விழாக்கொண்டாடுதல். |
அணங்காட்டு | சன்னதம், வெறியாட்டு. |
அணங்கார் | பெண்கள். |
அணங்குசார்ந்தாள் | படிமத்தாள். |
அணர்ச்செவி | எடுத்தசெவி. |
அணாப்பி | ஏய்ப்பவள். |
அணாப்பித்து | ஏய்த்து. |
அணாப்புதல் | ஏய்த்தல். |
அணார் | கழுத்து. |
அணிகலச்செப்பு | ஆபரணப்பெட்டி. |
அணித்து | சமீபித்து. |
அணியிலக்கணம் | பஞ்ச இலக்கணத் தொன்று. |
அணில்வாற்றினை | ஒருவகைத்தினை. |
அணிவியூகம் | படைவகுப்பு. |
அணிவு | அணிதல். |
அணுக | கிட்ட. |
அணுகம் | சிறியது. |
அணுகல் | கிட்டல். |
அணுகுதல் | அணிகல். |
அணுகுபு | அண்ணிதாகநின்று. |