அ - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அஞ்சலகம் | அஞ்சல் நிலையம் |
அஞ்சலி | (அக) வணக்கம் |
அஞ்சறைப்பெட்டி | சமையல் அறையில் கடுகு,மிளகு முதலியன மளிகைச் சாமான்கள் வைப்பதற்காகச் சிறிய அறைகள் கொண்ட பெட்டி |
அஞ்சனம் | தாது நஞ்சு வகை |
அஞ்சு | பயப்படுதல் |
அஞ்ஞாதவாசம் | (புராணத்தில்) பிறர் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி மறைந்து வாழ்தல் |
அஞ்ஞானம் | அறியாமை |
அஞ்ஞானி | உண்மை (ஆன்மீக) நெறி அறியாதவன் |
அட்சக்கோடு | நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு |
அட்சதை | மங்கல காரியங்களில் வாழ்த்தும் போது தூவப்படும் மஞ்சள் நீர் கலந்த அரிசி |
அட்சய பாத்திரம் | எடுக்க எடுக்க உணவு குறையாமல் இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம் |
அட்சர காலம் | தாளத்திற்கான கால அளவின் ஒரு பிரிவு |
அட்சரம் | ஒலிப்பு |
அட்சரம் பிசகாமல் | (ஒருவர் சொன்னதைத் திரும்பச் சொல்லும் போது)எந்த மாற்றமும் இல்லாமல்,அப்படியே |
அட்சராப்பியாசம் | (பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்)எழுத்துகளைக் கற்பித்தல் |
அட்சரேகை | அட்சக்கோடு,நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிட அமைத்துக்கொண்ட கற்பனைக் கோடு |
அட்டக்கரி | அட்டக்கறுப்பு,அடர்ந்த கருமை நிறம் |
அட்டகாசம் | தீங்கு,நாசம்,தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும் செயல் |
அட்டணங்கால் | கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்து (தரையில்) உட்கார்ந்திருக்கும் நிலை,சப்பணம்,அட்டணைக்கால் |
அட்டவனை | விவரங்களைப் பத்திகலாக வரிசப்படுத்திக் காட்டுவது,பட்டியல் |