அ - வரிசை 119 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அட்டலட்சணம்

அட்டகுணம்.

அட்டலோகம்

அட்டதாது.

அட்டவன்

அழித்தவன்.

அட்டவிஞ்சதி

இருபத்தெட்டு.

அட்டனம்

சக்கராயுதம்.

அட்டாட்சரி

அட்டாட்சரம்.

அட்டாதசம்

பதினெட்டு.

அட்டாதசவிவாதபதம்

அட்டாதச வியவகாரபதம்.

அட்டாதுட்டம்

அதிக தீங்கு.

அட்டாதுட்டி

அதிக துட்டத்தனம்.

அட்டாபதபத்திரம்

பொற்றகடு.

அட்டாலிகாகாரன்

கற்சிற்பன், சிற்பி.

அட்டாலைமண்டபம்

மேல் வீடாகக் கட்டப்பட்ட மண்டபம்.

அட்டாலைமரம்

ஒருமரம்.

அட்டாளிகை

மேன்மாடம்.

அட்டிகம்

சாதிக்காய்.

அட்டிமதுரம்

அதிமதுரம்.

அட்டினம்

கீரகம்.

அட்டோலிங்கம்

ஆடம்பரம், ஆரவாரம்,மகிழ்ச்சி.

அணங்கம்

இலட்சணம்.