அ - வரிசை 118 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அட்டசிரவணன்

பிரமன்.

அட்டணைக்கால்

மடித்தக்கால்.

அட்டதா

எட்டுப் பிரிவு, எண்மடங்கு.

அட்டதிசம்

எருக்கு.

அட்டதிசையானை

அட்டதிக்கயம்.

அட்டபாலகர்

அட்டதிக்குப்பாலகர்.

அட்டபுட்பம்

அவை கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள்.அறிவு, வாய்மை, தவம், அன்புஎன்பன.
எட்டுவகை பூக்கள்.அவை புன்னை, வெள்ளருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, நீலோற்பலம், அலரி, செந்தாமரை என்பன.பூப்போல விரும்பத்தக்க எட்டுக்குணங்கள்

அட்டபைரவர்

அட்டவைரவர்.

அட்டப்பிரணவம்

எட்டுப்பிரணவம்.

அட்டமக

எட்டாவது.

அட்டமங்கலம்

அட்டசுபம், ஒரு பிரபந்தம்.

அட்டமம்

எட்டாவது.

அட்டமாசித்தி

எட்டுவிதசித்தி.

அட்டமாநாகம்

அட்டநாகம்.

அட்டமி

எட்டாந்திதி.

அட்டமிகை

அரைப்பலம்.

அட்டமூர்த்தி

சிவபெருமான்.

அட்டமெய்ப்பரிசம்

அட்டபரிசம்.

அட்டயோகம்

அஷ்டாங்கயோகம்.

அட்டரக்கு

உருகியவரக்கு.